விருச்சகம் - வார பலன்கள்
கற்பனைச் செறிவோடு பணிபுரியும் விருச்சிக ராசி அன்பர்களே!
செய்யும் செயல்கள் சிலவற்றில் தீவிர முயற்சியின் காரணமாக வெற்றி பெறுவீர்கள். பண வரவுகள் திட்டமிட்டபடி வந்துசேரும். செலவுகளைக் குறைத்து சிக்கனமாக இருக்க நினைத்தாலும், ஏதாவது ஒரு வழியில் செலவு ஏற்படலாம். ஒரு சிலருக்கு சேமிப்பு கைகொடுக்கும். நட்பு வட்டாரங்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு. உத்தியோகஸ்தர்களில் ஒரு சிலர் தாங்கள் பார்த்த வேலையை விட்டு விட்டு ஆதாயம் தரும் வேறு வேலைக்குச் செல்ல முடிவெடுக்கலாம். சொந்தத் தொழிலில் வாடிக்கையாளர் ஒருவரின் அவசரம் கருதி, அவரது வேலையை உடனே செய்து முடிப்பீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களின் வியாபாரம் நன்கு நடைபெறும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். கலைஞர்களுக்கு, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பங்குச்சந்தையில் முதலீடுகளை அதிகரிக்க முற்படுவீர்கள்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டு வாருங்கள்.