விருச்சகம் - வார பலன்கள்


விருச்சகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 27 Jan 2023 1:22 AM IST (Updated: 27 Jan 2023 1:22 AM IST)
t-max-icont-min-icon

உறுதிமிக்க நெஞ்சம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

புதன் மாலை 4.59 மணி முதல் வியாழக்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால், தளர்வடைந்த செயல்களுக்கு தகுந்த உதவி கிடைக்காமல் போகலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சக ஊழியர்களின் பணியையும் சேர்த்துச் செய்ய வேண்டியதிருக்கும்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் பரபரப்பாக பணியாற்றினாலும் எதிர்பார்த்த வருமானம் இருக்காது. கூட்டுத்தொழில் சுமாராக நடைபெறும். ஆயினும் வழக்கமான லாபம் குறையாது. பணியாளர்களின் ஒத்துழைப்பு, வியாபார முன்னேற்றத்துக்குப் பயன் தரும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும், பெரிய பாதிப்புகள் ஏற்படாது. மகன் அல்லது மகளுக்கு கூடுதல் வருவாயுடன் வேலை அமையலாம். கலைஞர்கள் புதிய வாய்ப்பைப் பெற தீவிரமாக முயற்சிப்பர். பங்குச்சந்தை வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்காது.

பரிகாரம்:- செவ்வாய்க்கிழமை விநாயகப் பெருமானுக்கு, அருகம்புல் மாலை சூட்டி வழிபடுவது நல்ல பலன் அளிக்கும்.


Next Story