விருச்சகம் - வார பலன்கள்
27-10-2023 முதல் 2-11-2023 வரை
காரியங்களை சிறப்பாக செய்யும் விருச்சிக ராசி அன்பர்களே!
புதன் இரவு 7.25 மணி முதல் வியாழக்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால், எதிர்பாராதவிதமாக தொல்லைகள் தேடி வரும். நண்பர்களிடம் உதவி பெற்று சில பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் உயர் அதிகாரியின் ஆதரவுடன் பல சலுகைகள் பெறக்கூடும். வரவேண்டிய சம்பள பாக்கி போன்றவை கைக்குக் கிடைக்கலாம். சொந்தத் தொழிலில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பதால், குறிப்பிட்ட காலத்தில் கொடுக்க முடியாமல் பயனுள்ள பணிகள் கைநழுவிப் போகலாம். அதிக உதவியாளர்களை பணியில் நியமிக்க திட்ட மிடுவீர்கள். கூட்டுத் தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காணப்பட்டாலும், சிறு சிறு தொல்லைகளும் ஏற்படக்கூடும். கலைஞர்கள், சகக் கலைஞர்களின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபடுங்கள்.