விருச்சகம் - வார பலன்கள்
20-10-2023 முதல் 26-10-2023 வரை
அஞ்சாத நெஞ்சம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!
பணவரவுகள் தாமதமாகும். சகோதர வழியில் ஏற்பட்ட பிரச்சினைகளை பெற்றோர் மூலம் சரிசெய்து கொள்வீர்கள். முக்கியமான காரியங்களை தீவிர முயற்சியோடு செய்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் மாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கலாம். உயர் அதிகாரிகளின் விருப்பப்படி, அவசர பணியைச் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். வேலையில் கவனமாக இல்லாவிட்டால், உயர் அதிகாரியின் கோபப் பார்வையில் சிக்க வேண்டிய நிலை உருவாகும். சொந்தத் தொழில் நன்றாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர் சேர்க்கை உண்டு. கூட்டுத் தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் இல்லை என்றாலும், வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்-மனைவி ஒற்றுமை காணப்படும். கலைஞர்கள், புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்காகப் போராடுவார்கள்.
சிறப்புப் பரிகாரம்:-இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.