விருச்சகம் - வார பலன்கள்
எந்த செயலையும் எளிதாகச் செய்யும் விருச்சிக ராசி அன்பர்களே!
தள்ளிப் போட்டிருந்த காரியங்களை, நேரடியாகச் சென்று நிறைவாகச் செய்து முடிப்பீர்கள். பண வரவுகள் இருந்தாலும், செலவுகளும் அதிகமாகும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சினைகள், பெரியவர்களின் அறிவுரையால் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், அவசர பணியொன்றை அதிகாரிகள் உத்தரவின் பேரில் உடனடியாக செய்வீர்கள். ஒருசிலருக்கு சக ஊழியரின் பணியையும் சேர்த்து செய்ய வேண்டியதிருக்கும்.
சொந்தத்தொழிலில் வேலைப்பளு கூடும். குறிப்பிட்ட காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு பணிகளை முடித்துக் கொடுக்க இயலாமல் போகலாம். கூட்டுத் தொழிலில் லாபம் இருந்தாலும் அலுவலகம் சம்பந்தமான செலவு அதிகமாகும். குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்றாலும், உற்சாகம் இன்றி காணப்படுவர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு செவ்வரளிப் பூவால் அர்ச்சனை செய்யுங்கள்.