தனுசு - வார பலன்கள்
தெளிவான சிந்தனை கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
ஞாயிறு பகல் 2.09 மணி முதல் செவ்வாய் வரை சந்திராஷ்டம் இருப்பதால், பணப் பரிவர்த்தனையில் நிதானமான போக்கு தேவை. ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் அவசியம். சில விஷயங்களுக்காக முக்கியமான நபர்களைச் சந்தித்து அவசியமான காரியங்களை ஆக்கப்பூர்வமாக செய்து முடிப்பீர்கள். மற்றவர்களால் கடினமாகக் கருதப்படும் செயலொன்றை வெகு எளிதாக செய்து நண்பர்களால் பாராட்டப் படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அலுவலக சம்பந்தமான வெளியூர் பயணத்தை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் வியாபாரம் நன்றாக நடைபெறும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளில் பங்கு பெற வெளியூர் செல்லக்கூடும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை புத பகவானுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வணங்குங்கள்.