இன்றைய ராசிபலன் - 01.06.2024


இன்றைய ராசிபலன் - 01.06.2024
x
தினத்தந்தி 1 Jun 2024 1:07 AM GMT (Updated: 1 Jun 2024 11:48 AM GMT)

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் வைகாசி மாதம் 19-ம் தேதி சனிக்கிழமை

நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.03 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி.

திதி : இன்று காலை 06.28 வரை நவமி பின்பு தசமி

யோகம் : சித்த, மரண யோகம்

நல்ல நேரம் காலை : 07.30 - 08.30

நல்ல நேரம் மாலை : 4.30 - 5.30

ராகு காலம் காலை : 9.00 -10.30

எமகண்டம் பிற்பகல் : 1.30 - 3.00

குளிகை காலை : 6.00 - 7.30

கௌரி நல்ல நேரம் காலை : 10.30 - 11.30

கௌரி நல்ல நேரம் மாலை : 9.30 - 10.30

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : பூசம்

ராசி பலன்

மேஷம்

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கட்டளையினை நிறைவேற்றி நற்பெயரைப் பெறுவர். இழந்த மரியாதையை மீண்டும் பிடித்து விடுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். பிள்ளைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உடலில் எலும்புப் பிரச்சினை தீரும்.

அதிர்ஷ்டநிறம் : ரோஸ்

ரிஷபம்

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளிடம் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். வழக்கறிஞர்கள் பிரபலமாவார்கள். தங்கள் வழக்கு சாதகமாகும். மாணவர்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்துவர். மாணவர்கள் எதிர்பார்த்த துறையில் சேருவர்.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

மிதுனம்

பார்ப்பதற்கு நீங்கள் கரடுமுரடானவராகத் தெரிந்தாலும் உண்மையில் உங்களிடம் உதவிபுரியும் குணம் அதிகம்தான்.

இன்று பணப் பிரச்சினை இருக்காது. உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். ஆசிரியர்களுக்கு மதிப்பு கூடும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

கடகம்

பூச நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் பூச நட்சத்திரக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்ற இரு நட்சத்திரகாரர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இன்று இல்லை. புனர்பூசம் மற்றும் ஆயில்யம் இறைவனை இன்று பிராத்தித்து விட்டு தங்கள் பணியை ஆரம்பியுங்கள்.

அதிர்ஷ்டநிறம் : வெள்ளை

சிம்மம்

உயர்கல்வியில் நாட்டம் உண்டாகும். அதற்குண்டான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். உணவு, மருந்து, வாகன உதிரி பாகங்களால் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் பலிக்கும். தேக ஆரோக்கியம் சிறக்கும்.

அதிர்ஷ்டநிறம் : சாம்பல்

கன்னி

புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். விற்பனை கூடும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். பணமும் புகழும் இருந்தாலும் பந்தா செய்வது தங்களிடம் இல்லாத குணம். இதனாலேயே அதிக மக்கள் செல்வாக்கினை பெற்றவர் நீங்கள். சுபச் செலவுகள் அதிகமாகும். எதிர்வீட்டுக்காரருடன் இருந்த சச்சரவு விலகும்.

அதிர்ஷ்டநிறம் : ஊதா

துலாம்

பண விஷயத்தில் கறாராக இருங்கள். மற்றவர்களுக்காக கேரண்டி கையொப்பமிட வேண்டாம். அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும். மாணவர்கள் அடிக்கடி விடைகளை எழுதிப் பாருங்கள். அலட்சியமாக இருக்காதீர்கள். வெளியிடங்களில் உணவுகளை உட்கொள்ள வேண்டாம்.

அதிர்ஷ்டநிறம் : மஞ்சள்

விருச்சிகம்

நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அவர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். வசதி, வாய்ப்புகள் பெருகும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்

தனுசு

ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களில் ஒருசிலர் உங்களுடைய புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். வியாபாரத்தில் வரும் போட்டிகள் குறையும். அதிக லாபம் ஈட்டுவீர்கள்.

அதிர்ஷ்டநிறம் : சிவப்பு

மகரம்

ஒருசிலர் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்கு கடையை மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவீர்கள். நீண்ட கால கனவு நனவாகும். ரசனைக் கேற்ப வரன் அமையும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.

அதிர்ஷ்டநிறம் : ரோஸ்

கும்பம்

ஒரு சிலர் புகழ் பெற்ற பகுதிக்கு உங்களுடைய கடையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வெளிமாநிலம், அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். பாகப்பிரிவினை நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டநிறம் : பச்சை

மீனம்

பழைய வாகனத்தை நல்ல விலைக்கு விற்பீர்கள். புது பங்குதாரர்களால் உற்சாகமடைவீர்கள். உத்யோகத்தில் நெருக்கடி தந்த அதிகாரி மாறுவார். வேலைச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். மறைமுக அவமானங்களும் வந்து போகும். பொறுமை அவசியம்.

அதிர்ஷ்டநிறம் : நீலம்


Next Story