மீனம் - வார பலன்கள்
முயற்சியால் வெற்றிபெறும் மீன ராசி அன்பர்களே!
தளராத முயற்சியால் வெற்றிகளை பெறுவீர்கள். சில செயல்களில் எதிர்பார்க்கும் திருப்தி இல்லாமல் போகலாம். பணவரவு இருந்தாலும், செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, பதவி உயர்வு கிடைக்கலாம். அலுவலகத்தில் செல்வாக்கு அதிகமாகும்.
சொந்தத் தொழிலில் பழைய வாடிக்கையாளர்கள் மூலம் புதியவர்களின் அறிமுகம் ஏற்படலாம். அவர்களின் பணிகளை ஓய்வின்றி செயல்பட்டு முடித்துக் கொடுப்பீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். பணப் பொறுப்புகளில் உள்ளவர்கள் கவனமாக இல்லாவிட்டால் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளை நடத்த முன்னேற்பாடுகளைத் தொடங்குவீர்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். பங்குச்சந்தை வியாபாரம் நன்றாக நடைபெற்று லாபம் கிடைக்கும்.
பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் மாலை அணிவித்து வழிபடுங்கள்.