மீனம் - வார பலன்கள்


மீனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 6 Oct 2023 1:06 AM IST (Updated: 6 Oct 2023 1:07 AM IST)
t-max-icont-min-icon

6.10.2023 முதல் 12.10.2023 வரை

ஆன்மிக சிந்தனை நிறைந்த மீன ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த தகவல் ஒன்று கடிதம் மூலம் கிடைக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தள்ளிப் போகலாம். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமாக செயல்பட வேண்டும். எதிர்பார்த்த காரியங்கள் தள்ளிப் போகலாம்.

சொந்தத் தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் இருக்காது. பணியாளர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க வேண்டியதிருக்கலாம். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளின் இடையூறு இருக்கலாம். புதிய கூட்டாளியை அதிக மூலதனத்துடன் சேர்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்குவீர்கள். குடும்பத்தில் பொருளாதாரம் ஏற்ற, இறக்கமாக காணப்படும். சிறுசிறு கடன்கள் தொல்லை தரலாம். கலைத்துறையினர் சாமர்த்தியமாக பணிகளில் சுறுசுறுப்பு காட்டுவர். பங்குச்சந்தை லாபம் தரும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை அனுமனுக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபடுங்கள்.


Next Story