துலாம் - வார பலன்கள்
கலைகளில் நாட்டம் கொண்ட துலா ராசி அன்பர்களே!
புதன் மற்றும் வியாழக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால் சிலவற்றில் தளர்வு ஏற்படலாம். நிதானித்து செயல்பட்டால் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், தங்கள் பொறுப்புகளில் மிகவும் கவனமாக இல்லாவிட்டால், உயரதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரலாம். எதிர்பார்ப்புகள் சாதகமாகலாம். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். நவீன கருவிகளின் துணையோடு விரைவாக செய்து கொடுத்துப் பாராட்டுப் பெறுவார்கள்.
கூட்டுத்தொழில் செய்பவர்கள், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபத்தைப் பெறுவர். தொழில்போட்டிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சில பிரச்சினைகள் தலை காட்டினாலும், பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. கலைஞர்கள் கடினமானப் பணிகளில் பங்கேற்பதால் விபத்துக்களை எதிர்கொள்ள நேரலாம்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.