துலாம் - வார பலன்கள்
உற்சாகத்துடன் பணிபுரியும் துலா ராசி அன்பர்களே!
எதிர்பார்த்த காரியங்களில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். சில விஷயங்களுக்கு அதிக முயற்சிகள் தேவைப்படும். முக்கிய பணிகளை கவனத்துடன் செய்யுங்கள். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படலாம். சக ஊழியர்களிடம் வீண் வாதங்களை தவிர்ப்பது நல்லது. பணப் பரிவர்த்தனைகளை தள்ளி வைப்பது நன்மை தரும். சொந்தத் தொழிலில் பரபரப்பான சூழ்நிலை காணப்படும். அவசர வேலைகளை செய்ய ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியதிருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், முன்னேற்றமான பலன்களை அடைவார்கள். வியாபார தலத்தை விரிவாக்க பங்குதாரர்களோடு ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் - மனைவி ஒற்றுமை பலப்படும். சில்லறைக் கடன்கள் அடைபடும். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்களின் மூலம் புகழும், பொருளும் பெறுவார்கள்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் சங்கடம் தீரும்.