துலாம் - வார பலன்கள்
கலை உணர்வுடன் உழைக்கும் துலா ராசி அன்பர்களே!
அரசு சம்பந்தமான காரியத்தில் முயற்சியின் பேரில் வெற்றி பெறலாம். கேட்ட இடத்தில் உதவி கிடைக்காமல் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எதிலும் அகலக் கால் வைக்காமல் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு இருந்தாலும் பொறுப்புகளில் கவனம் தேவை. அனைவரிடமும் சுமுகமாக நடந்துகொள்வது அவசியம்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைத்தாலும், அலைச்சலும் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான போட்டிகளைச் சமாளிக்க வேண்டியதிருக்கும். கூட்டுத்தொழிலில் சிறு சலசலப்பு ஏற்படலாம். புதிய கூட்டாளியைச் சேர்க்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். புதிய கடன் வாங்கும் நிலை உருவாகும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளினால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு கருநீல மலர் மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபமிடுங்கள்.