துலாம் - வார பலன்கள்
சாஸ்திர ஆராய்ச்சி கொண்ட துலா ராசி அன்பர்களே!
வெள்ளி, சனி ஆகிய இரு தினங்களில் சந்திராஷ்டமம் உள்ளதால், எதிர்பார்த்ததை விட செலவு அதிகமாகும். பழைய கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு, பொறுப்புகள் அதிகமாகலாம். எதிர்பார்க்கும் பணவரவுகைகளுக்கு வந்துசேரும்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வேலைப்பளு கூடும். புதிய நபர்களின் அறிமுகம் மகிழ்வளிப்பதாக இருக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் வழக்கமான லாபம் பெறுவீர்கள். பங்குதாரர்களுடன் வியாபார வளர்ச்சி பற்றி ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் சீரானப் போக்கு காணப்படும். ஆனாலும் சிறுசிறு பிரச்சினைகளும் தலைகாட்டலாம். குடும்பத் தலைவருக்கு அதிக வருமானத்துடன் கூடிய வேலை கிடைக்கக்கூடும். கலைஞர்களில் சிலருக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அதிகப் பொருள் வரவுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம்.
பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை ஹயக்ரீவருக்கு துளசி மாலை சூட்டி, நெய் தீபமிடுங்கள்.