துலாம் - வார பலன்கள்
பெருமைக்குரிய செயலைச் செய்யும் துலா ராசி அன்பர்களே!
உங்கள் செயல் மற்றவர்களால் பாராட்டப்படும். உறவினரிடையே இருந்த பகை, உங்கள் முயற்சியால் தீரும். நீண்ட காலமாக துன்பத்தை அனுபவித்தவர்களுக்கு, அதில் இருந்து விடுபடும் வேளை வந்துவிட்டது. பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற துறைகளில் பணிபுரிவோருக்கு ஓரளவு ஏற்றம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக வந்தாலும், சேமிக்க முடியாதபடி செலவும் இருக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு கீழ் பணிபுரியும் நபர்களால், தொல்லைகள் உருவாகலாம். பங்காளி தொல்லையால் அவதிப்பட்டு வந்தவர்கள், அதில் இருந்து மீள்வார்கள். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஜாமீன் எதுவும் போட வேண்டாம். வரவும், செலவும் சமமாக இருக்கும்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு மல்லிகைப் பூவால் அர்ச்சனை செய்து வணங்குங்கள்.