துலாம் - வார பலன்கள்


துலாம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 5 May 2023 1:39 AM IST (Updated: 5 May 2023 1:39 AM IST)
t-max-icont-min-icon

காரியங்களை சுலபமாக செய்யும் துலாம் ராசி அன்பர்களே!

எதிர்பார்க்கும் பணவரவுகள் சிறிது தாமதித்து வந்துசேரும். முக்கிய மனிதர் ஒருவரின் எதிர்பாராத உதவி பயனுள்ளதாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், சகப் பணியாளர்களின் பணியையும் சேர்த்து செய்ய வேண்டியதிருக்கும். சொந்தத் தொழில் செய்பவருக்கு, பழைய வாடிக்கையாளர் மூலம் புதிய நபரின் அறிமுகமும், அவரால் தொழில் சம்பந்தமான முன்னேற்றமும் ஏற்படக்கூடும். கூட்டு வியாபாரம் செய்பவருக்கு லாபம் அதிகமாகும். முதலீடுகளைப் பெருக்கி, புதிய, நவீனக் கருவிகள் மூலம் பணியாற்றும் வகையில் தொழிலை விரிவாக்குவது பற்றி பங்குதாரர்களுடன் ஆலோசிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டாலும், அவற்றை சாமர்த்தியமாகச் சமாளித்து விடுவீர்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்றாலும், எதிர்பார்க்கும் வருமானம் கிடைக்காது. பங்குச் சந்தையில் லாபம் வந்துசேரும்.

பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தேவிக்கு செந்தாமரை மலர் சூட்டி வணங்குங்கள்.


Next Story