துலாம் - வார பலன்கள்
மிடுக்கான தோற்றம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே!
முயற்சியோடு செய்யும் சில காரியங்களில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்பார்க்கும் தனவரவுகளில் தாமதம் இருக்கக்கூடும். பழைய வாடிக்கையாளர் மூலம், புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பொறுப்புகளில் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும். சிறிய தவறும், உயரதிகாரிகளுக்குப் பெரிதாகத் தோன்றக்கூடும்.
சொந்தத் தொழிலில் இருப்பவர்கள் வாடிக்கையாளரின் முக்கிய வேலையை ஓய்வில்லாமல் செய்து கொடுக்க நேரலாம். பணம் சம்பந்தப்பட்ட பொறுப்பில் உள்ளவர்களைக் கண்காணிக்காவிட்டால் பிரச்சினை ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் இருக்கும். பெண்கள் விலை உயர்ந்த பொருள்களை வைத்த இடம் தெரியாமல் அல்லல்பட நேரிடும். சிலருக்கு ஆரோக்கியத்தில் குறை ஏற்படும். கலைஞர்கள், தீவிர முயற்சிகளின் பேரில் புதிய வாய்ப்பைப் பெறுவர்.
பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு, சிவப்பு மலர் மாலை சூட்டி நெய் தீபம் ஏற்றுங்கள்.