துலாம் - வார பலன்கள்


துலாம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 17 March 2023 1:24 AM IST (Updated: 17 March 2023 1:25 AM IST)
t-max-icont-min-icon

நல்ல சிந்தனை கொண்ட துலா ராசி அன்பர்களே!

உத்தியோகஸ்தர்களுக்கு வந்து சேரும் இடமாற்றத்தை தவிர்க்க இயலாது. இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கும். பயணம் செய்வதையும், புதிய முயற்சியில் இறங்குவதையும் தள்ளிப் போடுங்கள்.

வங்கியில் பழைய கடன் பாக்கி இருந்தால், அது குடும்பத்தில் அமைதிக் குறைவை உண்டாக்க வாய்ப்பு இருக்கிறது. நண்பர்கள் வழியில் பண வரவு உண்டு. ஆனாலும் கடன் வாங்குவதைக் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.

வேலைக்குச் செல்லும் பெண்கள், பண விஷயத்தில் சற்று சிக்கனமாக இருக்க வேண்டிய நேரம் இது. முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது உங்கள் வாழ்க்கை துணையிடம் மனம் விட்டுப் பேசி ஆலோசியுங்கள். எந்த நிலையிலும் மனக்கலக்கம் கொள்ள வேண்டாம். வேலை கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்தவர்களுக்கு, வேலை கிடைக்கும். மனம் போல் வாழ்க்கை அமையும்.

பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, சூரிய பகவானை வழிபாடு செய்து வந்தால், நன்மைகளை அடையலாம்.


Next Story