துலாம் - வார பலன்கள்
எழுத்துக் கலையில் சிறந்து விளங்கும் துலா ராசி அன்பர்களே!
எடுத்த காரியங்களில் முயற்சியோடு ஈடுபட்டு வெற்றியடைவீர்கள். நண்பர்கள் துணையாக இருப்பர். உத்தியோகத்தில் நண்பரின் வேலையையும் சேர்த்து செய்யும் நிலை ஏற்படலாம். எதிர்பார்த்த கடன் தொகை சிலருக்குக் கிடைக்கும்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்குத் தொழில் ரீதியான முக்கிய திருப்பம் ஏற்படக்கூடும். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகமாகலாம். கூட்டாளிகளுக்குத் தரவேண்டிய தொகையைப் பிரித்துக் கொடுப்பீர்கள். புதிய தொழில் தொடங்கத் திட்டமிடுவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கலாம். புதிய நண்பர்கள் வருகையால் முதலீடு அதிகமாகும். கலைஞர்கள் அதிக வருமானத்தால் மகிழ்ச்சியடைவார்கள். பணிகளில் பங்குபெற வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பம் சிறு சிறு பிரச்சினைகளைச் சந்தித்தாலும் பாதிப்பு இருக்காது.
பரிகாரம்:- பராசக்திக்கு திங்கட்கிழமை நெய் தீபமிட்டு வழிபட்டால் துன்பங்கள் அகலும்.