துலாம் - வார பலன்கள்
கம்பீரமான குரலால் மற்றவர்களைக் கவரும் துலா ராசி அன்பர்களே!
தொழில் துறையினர் படிப்படியான முன்னேற்றம் காண்பார்கள். வருமானம் கூடுதலாகும். காணாமல்போன பொருள் திரும்பப் கிடைத்து, மன நிம்மதியைத் தரும்.
கலைஞர்கள், புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். அதன் மூலம் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும். பல விஷயங்களில் கடும் முயற்சிகள் தேவைப்படும். பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்படலாம். இருந்தாலும், கடன் வாங்காமல் சமாளித்து விடுவீர்கள்.
உத்தியோகத்தில், உயர் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நற்பலன்கள் வந்துசேரும். பிற மொழி பேசும் ஒருவரால் நன்மையை அடைவீர்கள். எல்லோரிடமும் இனிமையாக பேசி சுமுகமாகப் பழக வேண்டிய நேரம் இது. வியாபாரத்தில் பொன்நிறப் பொருட்கள், கறுப்பு நிறப் பொருட்கள் அதிக லாபம் தரும். சகோதர வழியில் மனக்கசப்பு தோன்றி மறையும்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வணங்கினால் நன்மைகள் வந்துசேரும்.