துலாம் - வார பலன்கள்
திட்டமிட்டு செயலாற்றி பாராட்டுப் பெறும் துலா ராசி அன்பர்களே!
முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படும். பணப் பரிவர்த்தனையில் திட்டமிடுதல் அவசியம். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு அவசரமாக செய்த பணியொன்றில் ஏற்பட்ட தவறால், சிறு மனக்கலக்கம் ஏற்படலாம். சொந்தத் தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கச் சிறிது காலம் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டி நேரலாம். கூட்டுத்தொழில் சில சிரமங்களோடு நடைபெறும். கூட்டாளிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடும். குடும்பத்தில் எதிர்பாராத சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கினாலும் சமாளித்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் கல்விக்காகப் பணச்செலவு செய்ய நேரிடலாம். சிறு சலசலப்புகளுக்கு இடையே நல்ல காரியம் நடைபெறும். கலைஞர்கள், உறவினர்களின் வழியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். பங்குச்சந்தையில் சுமாரான லாபம் கிடைக்கும்.
பரிகாரம்:- நவக்கிரக சன்னிதியில் உள்ள சந்திரனுக்கு தீபமிட்டு வழிபடுவது மன அமைதி அளிக்கும்.