துலாம் - வார பலன்கள்
13-10-2023 முதல் 19-10-2023 வரை
கலைகளில் ஈடுபாடு நிறைந்த துலாம் ராசி அன்பர்களே!
முக்கியமான நபர்களைச் சந்திக்க இயலாமல், சில காரியங்களில் தளர்வு ஏற்படும். வரவேண்டிய தனவரவுகள் சரியான நேரத்துக்குக் கிடைத்தாலும், செலவுகளால் பற்றாக்குறை ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயரதிகாரிகளிடம் சுமுகமாக நடந்து கொள்ளாமல் பிரச்சினைகள் உருவாகலாம். சொந்தத் தொழிலில் புதிய நபர்களின் வருகையும், அவர்களால் பண வரவும் உண்டாகும். கொடுத்த வாக்குப்படி நடந்து கொள்ள முடியாமல் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கூட்டுத்தொழிலில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடைபெறாவிட்டாலும் வழக்கமான லாபம் குறையாது. குடும்பம் சிறுசிறு பிரச்சினைகளுக்கு இடையே நடைபெறும். ஆனாலும் தொல்லைகளை சாமர்த்தியமாகச் சமாளித்து விடுவீர்கள். கலைஞர்கள், புதிய வாய்ப்புகளைப் பெற தீவிரமாக முயற்சிப்பீர்கள்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை புத பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.