துலாம் - வார பலன்கள்
6.10.2023 முதல் 12.10.2023 வரை
சிந்தனை திறன் மிகுந்த துலாம் ராசி அன்பர்களே!
நண்பர்கள் உதவியால் காரியங்களில் இருந்த தடைகள் விலகும். தடைப்பட்ட வேலைகளை சுறுசுறுப்பாகச் செய்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்றுச் செய்ய நேரிடலாம். உத்தியோகஸ்தர்கள் நினைத்தது நடைபெறும். எதிர்பாராத தொகை கைக்குக் கிடைக்கலாம். விடுமுறையில் சென்றிருக்கும் சக ஊழியரின் பணிகளை அவசரமாக எடுத்து செய்ய வேண்டியதிருக்கும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் நல்ல திருப்பங்களைச் சந்திக்கலாம். பணியாளர்கள் சிறந்த முறையில் ஒத்துழைப்பு தருவார்கள். கூட்டுத்தொழிலில் இருந்த மந்தமான நிலை மாறி சுறுசுறுப்பு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கலைஞர்கள், கடினமான பணிகளில் கலந்து கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டுங்கள்.