துலாம் - வார பலன்கள்
29.9.2023 முதல் 5.10.2023 வரை
கலைகளில் ஈடுபாடு கொண்ட துலா ராசி அன்பர்களே!
முக்கியமான காரியங்களில் முயற்சியுடன் ஈடுபட்டு முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். இருப்பினும் செவ்வாய் முதல் வியாழக்கிழமை காலை 11.54 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், சில செயல்களில் தளர்ச்சி ஏற்படும். கூடுமான வரை எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள், பிறகு செய்ய நினைத்த காரியத்தை உயரதிகாரிகளின் விருப்பப்படி உடனே செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம். சொந்தத் தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால், வேலைப்பளு அதிகரிக்கும். அதே நேரம் வருவாயும் அதிகமாகக் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர் ஒருவர் பிரிந்து செல்லலாம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும், பெரிய பாதிப்பு வராது. கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவதில் கவனம் செலுத்துவார்கள்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வணங்கி வாருங்கள்.