துலாம் - வார பலன்கள்
கற்பனை வளம் நிறைந்த துலா ராசி அன்பர்களே!
சிறந்த முயற்சியும், அதிக உழைப்பும் கொண்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பயனுள்ள செலவுகளுக்கு, பண வரவுகள் உதவியாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்குப் பதவி உயர்வுடன் கூடிய பொறுப்புகள் கிடைக்கும். சகப் பணியாளர்களின் ஆதரவுடன் பணிகளில் ஈடுபட்டு பாராட்டுப் பெறுவீர்கள்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து மகிழ்வார்கள். அவசரமும், அவசியமும் கொண்ட பணிகளை விரைவாக செய்து கொடுத்து பாராட்டு பெறுவீர்கள். கூட்டுத்தொழிலில், பணியாளர்களின் ஒத்துழைப்புடன் அதிக வருமானத்தை ஈட்டுவீர்கள். எதைச் செய்தாலும் கூட்டாளிகளுடன் கலந்து பேசி முடிவெடுங்கள். குடும்ப வாழ்வு தொல்லைகள் இன்றி, சீராக நடந்து வரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களால் புகழ் பெறுவர். பங்குச்சந்தை விறுவிறுப்பாக நடைபெறும்.
சிறப்பப் பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை மாரியம்மனுக்கு மலர் மாலை சூட்டி, நெய் தீபமிடுங்கள்.