துலாம் - வார பலன்கள்
கற்பனை எழுத்தாற்றல் நிறைந்த துலா ராசி அன்பர்களே!
அவசியமான செயல்களில் தீவிர முயற்சியோடு ஈடுபடுவீர்கள். சிலவற்றில் தளர்வு ஏற்பட்டாலும், அவைகளிலும் வெற்றிபெற தக்கவர்களோடு முயற்சி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரிகளை அனுசரித்து செயல்படுவது நல்லது. தள்ளிவைத்த வேலை ஒன்றை உடனே செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம்.
சொந்தத் தொழிலில் வாடிக்கையாளரின் அவசர வேலையை செய்ய ஓய்வின்றி பணியாற்றுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் தொழில் ரீதியான முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். கூட்டுத்தொழிலில் லாபம் குறையாது. வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதை குறித்த காலத்தில் கொடுத்து நன்மதிப்பைப் பெறுவீர்கள். குடும்பம் சிறு சிறு பிரச்சினைகளைச் சந்தித்தாலும், பெரிய பாதிப்பு ஏற்படாது. கலைஞர்கள், வளமான எதிர்காலத்திற்கு திட்டமிடுவார்கள்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை சந்திர பகவானை நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.