துலாம் - வார பலன்கள்


துலாம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 18 Aug 2023 1:06 AM IST (Updated: 18 Aug 2023 1:06 AM IST)
t-max-icont-min-icon

குறையின்றி பணியாற்றும் துலாம் ராசி அன்பர்களே!

அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும் வாரம் இது. எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தள்ளி வைத்த காரியத்தை உயரதிகாரிகளின் விருப்பப்படி உடனடியாக செய்ய வேண்டியதிருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள், வேலைப்பளுவால் அல்லல்படுவார்கள். கூட்டுத் தொழிலில், போட்டி காரணமாக வியாபாரம் சுமாராக நடைபெற்று லாபம் குறையலாம். நிலுவைத் தொகை வசூலில் அதிருப்தி காணப்படும்.

குடும்பத்தில் சிறுசிறு கடன் தொல்லைகள் ஏற்படும். பெண்கள், உறவினர் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது கருத்து வேறுபாடு தோன்றலாம். பிள்ளைகளை உங்களுடைய மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். கலைஞர்கள், சகக்கலைஞர்கள் மூலம் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவர். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு வில்வ இலையால் மாலை சூட்டுங்கள்.


Next Story