துலாம் - வார பலன்கள்


துலாம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 21 July 2023 1:29 AM IST (Updated: 21 July 2023 1:29 AM IST)
t-max-icont-min-icon

முழு மனதுடன் பணிபுரியும் துலாம் ராசி அன்பர்களே!

முயற்சிகளில் வெற்றி காண தீவிரமாக உழைக்க வேண்டிய வாரம் இது. வழக்கமான உற்சாகமும், சுறுசுறுப்பும் கொண்டு செயல்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்களிடம் தரப்பட்டுள்ள பொறுப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, பணியாளர்களால் சிறு தொல்லை ஏற்படலாம். எனவே தொழிலை பலப்படுத்த வேண்டியது அவசியம்.

கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள் தங்கள் கூட்டாளிகளின் பிரச்சினைகளை நேரில் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகளைத் தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி இருந்தாலும், அவ்வப்போது சில பிரச்சினைகளும் ஏற்படத்தான் செய்யும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களால் உற்சாகம் காண்பர். பங்குச்சந்தையில் எதிர்பாராத திருப்பம் உண்டு.

பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு சர்க்கரைப் பொங்கல் படைத்து வணங்குங்கள்.


Next Story