துலாம் - வார பலன்கள்


துலாம் - வார பலன்கள்
தினத்தந்தி 7 July 2023 12:41 AM IST (Updated: 7 July 2023 12:42 AM IST)
t-max-icont-min-icon

07-07-2023 முதல் 13-7-2023 வரை

சீர்மிகு பேச்சாற்றல் நிறைந்த துலா ராசி அன்பர்களே!

வியாழக்கிழமை அன்று சந்திராஷ்டமம் உள்ளதால், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். செயல்களில் முயற்சியுடனும், உற்சாகத்துடனும் ஈடுபட்டாலும் சில காரியங்களிலேயே எதிர்பார்க்கும் வெற்றிகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு அலுவலகப் பணியின் நிமித்தம் வெளியூர் செல்லும் நிலை ஏற்படலாம். அலுவலகப் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு பழைய வாடிக்கையாளர் மூலம், புதிய நபரின் அறிமுகம் ஏற்படலாம். கூட்டுத்தொழில் வியாபாரத்தில், மூலப் பொருட்களின் தட்டுப்பாடும், விலைவாசி உயர்வும் பாதிப்பை உண்டாக்கக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் சுமுகமாக நடந்து கொண்டால் பல பிரச்சினைகளை சமாளிக்க இயலும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவர்.

பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை நரசிம்மருக்கு துளசி மாலை அணிவித்து, நெய் தீபமிடுங்கள்.


Next Story