சிம்மம் - வார பலன்கள்
07-07-2023 முதல் 13-7-2023 வரை
நீதி நெறிகளில் பற்று கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால், எளிதாகச் செய்து வெற்றி பெறலாம் என்று கருதிய வேலையை அதிக சிரமத்துடன் முடிக்க வேண்டியதிருக்கும். அதிகமான அலைச்சலை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியரின் பணியையும் சேர்த்துச் செய்யும் நிலை ஏற்படலாம். அதிகப் பொறுப்புகளால் வேலைப்பளு இருக்கலாம்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, அவசரமாகச் செய்ய வேண்டிய காரியங்களில் அலைக்கழிப்பை சந்திக்கும்படி ஆகலாம். தொழில் மேன்மைக்குப் புதிய திட்டம் ஒன்றைப் போடுவீர்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்கள், கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது அவசியம். வியாபாரத்தில் சுமாரான லாபம் ஏற்படும். குடும்பத்தில் சொத்துப் பிரச்சினையால் ஏற்பட்ட சிக்கல் தீர வழி பிறக்கும். கலைஞர்கள் சிறு விபத்துக்களைச் சந்திக்க நேரலாம்.
பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை மாரியம்மனுக்கு செவ்வரளி மலர் சூட்டி, நல்லெண்ணெய் தீபமிடுங்கள்.