சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்


சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 10 May 2022 8:26 PM IST (Updated: 10 May 2022 8:29 PM IST)
t-max-icont-min-icon

வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை


மற்றவர்களை வழிநடத்திச் செல்வதில் வல்லவர்களான சிம்ம ராசி நேயர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் 10-ம் இடத்தில் சஞ்சரிப்பதால், தொழில் முன்னேற்றம் ஏற்படும். அஷ்டம குருவால், விரயங்கள் கூடும்.

மீன - செவ்வாய் சஞ்சாரம்

வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அவர் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திற்குச் செல்வது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லையும், மனக்குழப்பமும் உண்டாகும். குருவோடு செவ்வாய் இணைந்து 'குருமங்கள யோகம்' ஏற்படுவதால், இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பொருளாதார பற்றாக்குறை நிலவும். இடம், பூமியால் கிடைக்க வேண்டிய லாபம் தாமதமாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது.

சனி - செவ்வாய் பார்வைக் காலம்

வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். எனவே உங்கள் ராசிப்படி அஷ்டம ஸ்தானம் வலுவடைகிறது. உறவுகள் பகையாகலாம். பிறருக்கு நன்மை செய்தாலும் அது தீமையாக தெரியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தாமதப்படும். பணநெருக்கடி அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லை உண்டாகும்.

புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு தன-லாபாதிபதியான புதன் வக்ர நிவர்த்தியாவதால், மிகுந்த யோகம் வந்துசேரும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். எனவே 'புத ஆதித்ய யோகம்' செயல்பட்டு, கல்விக்காக எடுத்த முயற்சி வெற்றிபெறும். பொதுவாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

இதுவரை மீனத்தில் உச்சம் பெற் றிருந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். இக்காலத்தில் பாக்கிய ஸ்தானம் வலுப் பெறுவதால், பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். குடும் பப் பிரச்சினை படிப்படியாக மாறும். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு. இல்லம் தேடி நல்ல தகவல் வரும்.

மகரச் சனியின் வக்ர காலம்

உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். சப்தமாதிபதி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. உத்தியோகத்தில் சக ஊழியர்களோடு பிரச்சினை தலைதூக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்குவீர்கள். வெளிநாட்டு பயணம் தாமதப்படும். ஆதரவு தருவதாகச் சொன்னவர்கள், கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். 6-க்கு அதிபதியாகவும் சனி இருப்பதால், உடல்நலம் சீராகும்.

இம்மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 18, 27, 28, ஜூன்: 2, 3, 8, 9, 12, 13, 14 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் விரயங்கள் அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. ஒரு சிலர் ஒவ்வாமை நோய்க்கு ஆட்பட நேரிடும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளை களின் கல்யாணக் கனவுகளை நனவாக்க, பெரும் முயற்சி எடுக்கும் சூழ்நிலை ஏற்படும். வருமானப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். கடன்சுமை கூடிக்கொண்டே செல்லும். பணிபுரியும் பெண்களுக்கு உயர்பதவி கிடைப்பது தாமதமாகும். எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது.


Next Story