சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்
ஆவணி மாத ராசி பலன்கள் 17-08-2022 முதல் 17-09-2022 வரை
வாய்ப்பைத் தேடிச் செல்லாமல் தன்னைத் தேடி வரவைக்கும் சிம்ம ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்தான். உடல்நலம் சீராகும். செல்வ நிலை உயரும்.
சிம்ம - சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு அதிபதியான சூரியன், மாதம் முழுவதும் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். இது ஒரு அற்புதமான நேரமாகும். தொட்ட காரியங்கள் வெற்றியாகும். அரசுவழி ஆதரவு கிடைக்கும். பணப்புழக்கம் சரளமாகும். உத்தியோகத்தில், நீங்கள் கேட்ட சலுகைகள் கிடைக்கும். தொழில் வளம் சிறக்கும். அரசியலில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.
கன்னி - புதன் சஞ்சாரம்
ஆவணி 8-ந் தேதி, கன்னி ராசிக்குச் செல்லும் புதன் அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2-ம் இடமான தன ஸ்தானத்திற்கும், 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் புதன். அவர் தன ஸ்தானத்தில் பலம்பெறும் போது, தனவரவு தாராளமாகும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் மனதில் உருவாகும்.
வக்ர புதன் சஞ்சாரம்
ஆவணி 12-ந் தேதி, உங்கள் ராசிக்கு வக்ர இயக்கத்தில் புதன் வருகிறார். புதன் வக்ரம் பெறுவதால் பொிய அளவில் பாதிப்பு ஏற்படாது. பொருளாதாரப் பற்றாக்குறையை அகற்ற புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பிரச்சினை இருந்தாலும், முன்னேற்றத்தில் முட்டுக்கட்டை வராது. 'புத ஆதித்ய யோகம்' செயல்படும் இந்த நேரத்தில் வங்கிகளின் உதவி கிடைக்கும்.
சிம்ம - சுக்ரன் சஞ்சாரம்
ஆவணி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், உங்கள் ராசியிலேயே இருப்பதால் தொழில் வளம் சிறப்பாகும். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர்.
குரு வக்ரமும், சனி வக்ரமும்
மாதம் முழுவதும் குருவும், சனியும் வக்ர இயக்கத்தில் உள்ளனர். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவா் குரு. அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான் என்றாலும், பஞ்சமாதி பதியாகவும் அல்லவா குரு இருக்கிறார். பிள்ளைகள் வழியில் விரயங்கள் ஏற்படும். தொழிலில் ஒருசில இழப்பு ஏற்படலாம். சனியின் வக்ர காலத்தில் இடமாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் அமையலாம். குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த மாதம் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபட்டால் தடைகள் அகலும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஆகஸ்டு: 17, 18, 23, 24, 30, 31, செப்டம்பர்: 2, 3, 4, 14, 15 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் - மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பக்கத்தில் உள்ளவர்களின் பகையை வளரவிட வேண்டாம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சகப் பணியாளர்களும் உறுதுணையாக இருப்பர்.