சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்


சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 16 July 2022 9:56 PM IST (Updated: 16 July 2022 10:24 PM IST)
t-max-icont-min-icon

ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2022 முதல் 16-08-2022 வரை

மற்றவர்களுக்கு உதவ வேண்டுமென்று நினைக்கும் சிம்ம ராசி நேயர்களே!

ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் விரய ஸ்தானத்தில் இருப்பதால் விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். குரு பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் பொருளாதார வளர்ச்சியும் உண்டு.

சிம்ம - புதன் சஞ்சாரம்

ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது மிகமிக யோகமாகும். தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். வெற்றி வாய்ப்பு வீடு தேடி வரும். கூட்டாளிகள் உங்கள் குறை களைத் தீர்க்க முன்வருவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். அனுபவஸ்தர்களின் ஆலோசனையால் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள்.

கடக - சுக்ரன் சஞ்சாரம்

ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்திற்கு வரும் பொழுது, சகோதரர்களால் விரயம் ஏற்படலாம். தொழிலில் ஒரு சில பங்குதாரர்கள் விலகினாலும், அதை ஏற்று நடத்தும் வல்லமை உங்களுக்கு வரும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறலாம்.

குருவின் வக்ர இயக்கம்

ஆடி 23-ந் தேதி, மீன ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அஷ்டமாதிபதி குரு வக்ரம் பெறுவது நன்மை தான். என்றாலும், பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியாகவும், புத்திர ஸ்தானாதிபதியாகவும் குரு விளங்குவதால் சில பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. தொழிலில் சில மாற்றங்களைச் செய்ய முன்வருவீர்கள்.

அஷ்டமாதிபதியான குரு வக்ரம் பெறுவதால் இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். எதிர்கால முன்னேற்றம் கருதித் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். வாகன மாற்றங்கள், இடமாற்றங்கள் பற்றிய சிந்தனை மேலோங்கும். நண்பர்கள் உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவர். இல்லத்தில் சுப காரியம் நடைபெற வழிபிறக்கும்.

ரிஷப - செவ்வாய் சஞ்சாரம்

ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகமான செவ்வாய், 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். அவர் 10-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளம் சிறக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். சொத்துக்களால் ஆதாயம் உண்டு. உடன்பிறந்தவர்களும், உடன் இருப்பவர்களும் உறுதுணையாக இருப்பர். வருமானமும், வளர்ச்சியும் திருப்தி தரும்.

இம்மாதம் வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 17, 18, 23, 24, 29, 30, ஆகஸ்டு: 2, 3, 4, 6, 7, 8 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் திருப்தி ஏற்படாது. கணவன் - மனைவிக்குள் சிறுசிறு பிரச்சினை ஏற்பட்டு அகலும். அஷ்டமத்து குரு வால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. எதிர்பார்த்த இடமாற்றம் கைநழுவிச் செல்லும். பணப்பொறுப்புகளால் பிரச்சினையை சந்திப்பீர் கள். பணிபுரிபவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. சகப் பணியாளர்களிடம் ஒத்துப் போவது நல்லது.


Next Story