மிதுனம் - வார பலன்கள்


மிதுனம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 8 Sept 2023 1:16 AM IST (Updated: 8 Sept 2023 1:17 AM IST)
t-max-icont-min-icon

உயர்வான எண்ணம் கொண்ட மிதுனராசி அன்பர்களே!

நன்மைகளை அதிகமாக சந்திக்கும் வாரம் இது. முன்னேற்ற திட்டங்களை முறைப்படுத்தி வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் மாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர் வழியில் சேர வேண்டிய பூர்வீக சொத்துக்களில் காணப்பட்ட சிக்கல்கள் விலகும். உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் ஏற்படக்கூடும். சொந்தத் தொழிலில் நல்ல வருமானம் காணப்படும். வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து செயல்படுவீர்கள். கூட்டுத்தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். பணியாளர்கள் ஒற்றுமையுடனும், திறமையுடனும் பணியாற்றுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பழைய கடன்களை தீர்க்க முயற்சிப்பீர்கள். கலைஞர்கள் எதிர்பார்த்த நிறுவனத்தில் இருந்து அழைப்பு கிடைத்து மகிழ்வர்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சூட்டி வழிபடுங்கள்.


Next Story