மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்


மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பங்குனி மாத ராசி பலன்கள் 15-03-2023 முதல் 13-04-2023 வரை

சிகரம் போல் உயர சிறப்பாக உழைக்க வேண்டுமென்று சொல்லும் மிதுன ராசி நேயர்களே!

பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது தங்கு தடைகள் அகலவும், தக்க விதத்தில் சுபகாரியங்கள் நிகழவும் கிரக நிலைகளின் சஞ்சாரம் சாதகமாக இருக்கின்றது. அஷ்டமத்துச் சனி விலகும் இந்த மாதம் அற்புதமான பலன்கள் உங்களைத் தேடிவரப்போகின்றது. ஒப்பற்ற வாழ்க்கை அமையும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். நற்பெயருக்கு களங்கம் விளைவித்தவர்கள் விலகிச் செல்வர். நாடு மாற்றங்களும், வீடு மாற்றங்களும் நலமாக அமையும். இதுவரை பற்றாக்குறையிலேயே இருந்த உங்கள் வாழ்க்கை பணத்தேவைகள் பூர்த்தியாகும் விதத்தில் இனிமேல் அமையப்போகிறது.

உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் முற்பகுதியில் சனி சஞ்சரிக்கிறது. எனவே பங்குனி 14-ந் தேதி வரை செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிகின்றது. இக்காலத்தில் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். வம்பு, தும்புகள் வந்துசேரும். தண்டச் செலவுகளும், தட்டுப்பாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நிற்கும். சண்டை, சச்சரவுகள் குடும்பத்தில் அதிகரிக்கும். அமைதி கிடைக்க வேண்டுமானால் அருகில் இருப்பவர்களை அனுசரித்துக் கொள்ளுங்கள். ஆதாயம் கிடைக்க வேண்டுமானால் தொழில் கூட்டாளிகளை கண்காணித்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களிடம் ஒப் படைக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைத்தால் பிரச்சினைகள் தலைதூக்கும்.

மேஷ - புதன்

பங்குனி 15-ந் தேதி உங்கள் ராசிநாதன் புதன், லாப ஸ்தானத்திற்கு செல்கிறார். எனவே அதிர்ஷ்ட வாய்ப்புகள் அரங்கேறும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழிலில் கூடுதல் லாபம் கிடைத்து பொருளாதார நிலை உயரும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம். அலைச்சலும் இல்லை, அல்லலும் இல்லை. உழைப்புக்கு, உடனடியாக பலன் கிடைக்கும் நேரம் இது. பரிசம் போடுவதற்கு பலமான வாய்ப்பு வரும். வரிசையாய் யோகம் வரும்.

ரிஷப - சுக்ரன்

பங்குனி 24-ந் தேதி, விரயாதிபதி சுக்ரன் விரய ஸ்தானத்திற்கு செல்கிறார். அடுக்கடுக்காக விரயங்கள் வந்தாலும் அனைத்தும் நன்மைக்குத்தான். வீடு வாங்க விரயம், விவாகம் நடைபெற விரயம், வாகனம் வாங்க விரயம், புதிய தொழில் தொடங்க விரயம் என்று பட்டியல் போடும் நேரம் இது. பஞ்சமாதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால், நெஞ்சம் மகிழும் சம்பவம் நிறைய நடைபெறும். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் உள்ளத்தில் இடம்பெறுவீர்கள். புதிய நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகள் புன்னகையை வரவழைத்துக் கொடுக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும். வியாபாரம் செய்பவர்கள், வெற்றிப் படிக்கட்டில் ஏறுவர். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். கலைஞர் களுக்கு புகழ் ஏணியின் உச்சிக்குச் செல்லும் வாய்ப்பு உருவாகும். மாணவ - மாணவியர்கள் அக்கைறயோடு படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம். பெண்களுக்கு குதூகலம் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டு. எதிர்பார்த்த சுபநிகழ்ச்சிகள் இல்லத்தில் இனிதே நடைபெறும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மார்ச்: 19, 20, 21, 24, 26, ஏப்ரல்: 1, 2, 6, 7.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.


Next Story