மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்


மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 18 Sept 2022 2:28 AM IST (Updated: 18 Sept 2022 2:30 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத ராசி பலன்கள் 18-09-2022 முதல் 17-10-2022 வரை

எவரையும் பார்த்தவுடன் பேச்சாற்றலால் கவர்ந்திழுக்கும் மிதுன ராசி நேயர்களே!

புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன், சுக்ரனோடு இணைந்து 'புத-சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே எதிர்பாராத விதத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.

கன்னி - சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் புரட்டாசி 8-ந் தேதி கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகி, அங்கு நீச்சம் பெறுகிறார். அது அவ்வளவு நல்லதல்ல. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி நீச்சம் பெறுவதால், காரியங்களில் தடைகள் வரலாம். நல்ல வாய்ப்புகள் வந்தாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. பாகப்பிரிவினையில் இழுபறி நிலை ஏற்படும்.

கன்னி - புதன் சஞ்சாரம்

புரட்டாசி 16-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். உடல் ஆரோக்கியம் சீராகும். உள்ளத்தில் அமைதி கிடைக்கும். கடன்சுமை பாதிக்கு மேல் குறையும். நீண்டநாள் எண்ணங்கள் நிறைவேற, போதுமான வருமானம் கிடைக்கும். படிப்பில் ஏற்பட்ட தடை அகலும். விலகியிருந்த உறவினர்கள் இப்பொழுது மீண்டும் வந்திணைவர். வீடு வாங்கும் திட்டங்கள் நிறைவேறும். தாயின் உடல்நலம் சீராகும். சுக ஸ்தானம் பலமடைந்திருக்கும் இந்த நேரத்தில், சுகங்களும், சந்தோஷங்களும் தானாக வந்து சேரும்.

மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 6, 11-க்கு அதிபதியான செவ்வாய், புரட்டாசி 22-ந் தேதி உங்கள் ராசிக்கே வருகிறார். இதனால் கடன் சுமை அதிகரிக்கும். உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுக்க வேண்டாம். அவர்களால் அதை நிறைவேற்ற முடியாமல் பெரும் பிரச்சினையில் கொண்டு வந்துவிடும்.

உங்கள் ராசியில் இருக்கும் செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்ப்பதால் மிகமிக கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக ஆரோக்கியத் தொல்லை, அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சியில் ஆதாயக் குறைவு, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிலை உருவாகும். விரயாதிபதி செவ்வாய், சனியைப் பார்ப்பதால் விரயங்கள் கூடும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வதே நல்லது.

சனி வக்ர நிவர்த்தி

புரட்டாசி 23-ந் தேதி, சனி வக்ர நிவர்த்தியாகிறார். அஷ்டமத்துச் சனி வலுவடையும் இந்த நேரத்தில், வரவைக் காட்டிலும் செலவு கூடும். வளர்ச்சியில் தளர்ச்சி அதிகரிக்கும். வீண் விரயங்கள் தலைதூக்கும். எதிர்மறை சிந்தனைகள் தோன்றும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. பணிபுரியும் இடத்தில் பணப்பொறுப்பில் இருப்பவர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபட்டால் முன்னேற்றம் கூடும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-செப்டம்பர்: 20, 21, 26, 27, அக்டோபர்: 7, 8, 12, 13, 16.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக் கும். கணவன் - மனைவி கருத்து வேறுபாடு அதிகரிக்கும். திட்டமிட்டபடி காரியங் களை செய்ய இயலாது. அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தால் காரியங்கள் தடைபடும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்குத் திடீரென இடமாற்றம் ஏற்பட நேரிடலாம். சகப் பணியாளர்களால் தொல்லையுண்டு.


Next Story