மகரம் - வார பலன்கள்
6.10.2023 முதல் 12.10.2023 வரை
சுயமாக சிந்திக்கும் மகர ராசி அன்பர்களே!
செவ்வாய் காலை 8.30 மணி முதல் வியாழன் வரை சந்திராஷ்டமம் உள்ளதால், எதிலும் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். வீடு, நிலம் வாங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகஸ்தர்கள் புதிய திருப்பம் காண்பர். சிலருக்கு பதவி உயர்வோடு வெளியூர் மாற்றம் கிடைக்கக் கூடும். சகப் பணியாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், வியாபாரத்தில் கவனமாக இருங்கள். புதிய வாடிக்கையாளரை திருப்தி செய்வதில் சிரமம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் லாபம் இருந்தாலும், அலைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருக்கலாம். நண்பர்களும், உறவினர்களும் தக்க சமயத்தில் உதவிகரமாக இருப்பர். கலைத்துறையினர் தொழிலில் ஏற்றம் காண்பர். பங்குச்சந்தை லாபம் தரும்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை அங்காரகனுக்கு சிவப்பு மலர் மாலை சூட்டுங்கள்.