மகரம் - வார பலன்கள்


மகரம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 22 Sept 2023 1:34 AM IST (Updated: 22 Sept 2023 1:34 AM IST)
t-max-icont-min-icon

நீதி, நேர்மையுடன் பழகும் மகர ராசி அன்பர்களே!

ஏற்றமான பலன்களைப் பெற, இடைவிடாது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சில செயல்களில் வெற்றிபெற நண்பர்கள் ஆதரவு அளிப்பார்கள். வீடு, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்து, பதவி உயர்வும், எதிர்பார்த்த இடமாற்றமும் ஏற்படலாம். சிலருக்கு அலுவலகத்திலேயே பொறுப்பான பணிகள் தேடி வரக்கூடும்.

சொந்தத் தொழில் செய்பவர்கள் நண்பர்கள் மூலம் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவார்கள். பணிகளும், பண வசதிகளும் மகிழ்வு தருவதாக இருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள், பணப் பெருக்கத்தால், புதிய தொழில் தொடங்கத் திட்டமிடுவார்கள். குடும்பத்தில் விலகிச்சென்ற சொந்தங்கள் விருப்பி வந்து இணைவர். கலைஞர்களின், புகழ் அதிகரிக்கும். பிரபல நிறுவன ஒப்பந்தங்கள் கிடைத்து ஓய்வின்றி பணியாற்றுவீர்கள்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபடுங்கள்.


Next Story