மகரம் - வார பலன்கள்


மகரம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 25 Aug 2023 1:11 AM IST (Updated: 25 Aug 2023 1:12 AM IST)
t-max-icont-min-icon

காரியங்களை முயற்சியுடன் செய்யும் மகர ராசி அன்பர்களே!

சாமர்த்தியம் மிக்க நீங்கள், நண்பர்களின் துணையோடு செயல்பட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். தாய்வழி உறவு மூலம் சிறு பிரச்சினை உருவாகலாம். உத்தியோகஸ்தர்கள், உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் முக்கிய பொறுப்புக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படலாம்.

சொந்தத்தொழில் சிறப்பாக நடைபெறும். பணிகளைக் கவனமாகச் செய்யாவிட்டால் மீண்டும் செய்ய வேண்டியதிருக்கும். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் காணப்படும். கூட்டாளிகளிடம் அதிருப்தி இல்லாமல் பழகுவது நல்லது. குடும்பம் நன்றாக நடந்தாலும் சிறு சிறு பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும். சுபகாரியங்கள் சிறு தாமதத்திற்குப் பின் நடைபெறும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களால் பணிகளில் சுறுசுறுப்பு காட்டுவர். பங்குச்சந்தை சுமாராக நடைபெறும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை பூஜைக்கான பொருட்களை சக்திக்கேற்றவாறு வாங்கிக் கொடுங்கள்.


Next Story