மகரம் - வார பலன்கள்


மகரம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 21 July 2023 1:32 AM IST (Updated: 21 July 2023 1:33 AM IST)
t-max-icont-min-icon

உறுதியுடன் செயல்படும் மகர ராசி அன்பர்களே!

வெள்ளி, சனி ஆகிய தினங்கள் சந்திராஷ்டமம் உள்ளதால், எதிலும் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு, இடமாற்றம் பெறக் கடுமையான முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கும். வெளியூர் பயணங்களில் அலுவலகம் சம்பந்தமான பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். சொந்தத் தொழிலில் உள்ளவர்கள் சுமாரான லாபத்தைப் பெறுவீர்கள்.

கூட்டுத்தொழிலில் உள்ளவர்கள், கூட்டாளியின் செயல்களையும், கணக்குகளையும், அவ்வப்போது சரிவர பராமரிப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால் சிறிது காலத்திற்கு தள்ளிப் போடுங்கள். குடும்பத்தில் தன வரவுகள் இருந்தாலும், செலவுகளும் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு, புதிய ஒப்பந்தங்கள் கிடைத்தாலும் வருமானம் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது.

பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.


Next Story