மகரம் - தமிழ் மாத ஜோதிடம்


மகரம் - தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 10 May 2022 8:38 PM IST (Updated: 10 May 2022 8:39 PM IST)
t-max-icont-min-icon

வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை

கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் மகர ராசி நேயர்களே!

வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். தன ஸ்தானத்தில் செவ்வாயும், சகாய ஸ்தானத்தில் குருவும் சஞ்சரிப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

மீன - செவ்வாய் சஞ்சாரம்

வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த காரியம் தாமதப்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

சனி - செவ்வாய் பார்வைக் காலம்

வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். இக்காலத்தில் மருத்துவச் செலவு கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. தடைகளும், மனப் போராட்டமும் அதிகரிக்கும். வாங்கிய இடத்தை விற்கக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.

புதனின் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

வைகாசி 7-ந் தேதி, புதன் வக்ர நிவர்த்தியாகிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு இனிய காலம்தான். உத்தியோக மாற்றம் உருவாகலாம். மணவாழ்வில் இருந்த கருத்து வேறுபாடு அகலும். தனவரவிற்கு குறைவிருக்காது. வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். 6, 9-க்கு அதிபதி புதன் 5-ம் இடத்திற்குச் செல்லும் இந்த நேரத்தில் நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். புதிய வாய்ப்புகளை வரவழைத்துக்கொள்வீர்கள். நீண்ட நாளைய சச்சரவுகள் மாறும்.

மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த காலகட்டத்தில் பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலம்.

மகரச் சனியின் வக்ர காலம்

உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தனாதிபதியாகவும் விளங்கும் சனி பகவான், வைகாசி 11-ந் தேதி வக்ரம்பெறுகிறார். அது அவ்வளவு நல்லதல்ல. உடல்நலத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். தடைகளை வென்று முன்னோக்கிச் செல்ல வேண்டிய நேரம் இது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் பணிநீக்கம் ஏற்படலாம். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி, பல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 23, 24, 28, 29, ஜூன்: 9, 10, 12, 13மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர் நீலம்.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச்செய்வது நல்லது. பணப்புழக்கம்நன்றாக இருந்தாலும் மனக்குழப்பமும் அதிகரிக்கும். கணவன் - மனைவி உறவில் பாசமும் நேசமும் குறையும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலம் உண்டு. சகப் பணியாளர்களால் திடீர், திடீரெனப் பிரச்சனைகள் உருவாகும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.


Next Story