மகரம் - தமிழ் மாத ஜோதிடம்


மகரம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சித்திரை மாத ராசி பலன்கள் 14-04-2023 முதல் 14-05-2023 வரை

சிந்தனையை செயலாக்குவதில் வல்லவர்களான மகர ராசி நேயர்களே!

சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். ஏழரைச் சனியில் விரயச் சனி விலகி, ஜென்மச் சனி விலகி, இப்பொழுது பாதச் சனி நடைபெறுகின்றது. ஒருசில மாதங்கள் மட்டுமே இருந்தாலும் இதன் பலன் உங்களுக்கு நற்பலன்களாகவே அமையும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புகழ்மிக்க தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவீர்கள். ஸ்தம்பித்து நின்ற தொழில் இனி தடையின்றி நடைபெறும். வம்பு வழக்குகள் ஓயும். வளர்ச்சி கூடும். கிரக நிலைகள் சாதகமாக இருந்தாலும் ஏழரைச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், எதிலும் கொஞ்சம் கவனத்தோடு செயல்படுவது நல்லது. புதிய கடன்கள் வாங்கும் சூழ்நிலையும் உருவாகும்.

சனியின் சஞ்சாரம்

மாதத் தொடக்கத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதை 'குடும்பச்சனி' அல்லது 'பாதச்சனி' என்று சொல்வார்கள். உங்கள் ராசிநாதனாகச் சனி இருப்பதால் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தமாட்டார். இருந்தாலும் அன்றாடம் ஏதேனும் ஒரு பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். இனம்புரியாத கவலைகள் இனி மாறும். எதையும் துணிந்து செய்து வெற்றிபெறுவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். ஒருசிலருக்கு வீடு மாற்றமும், நாடு மாற்றமும் வரலாம்.

மேஷ - குரு

சித்திரை 9-ந் தேதி மேஷ ராசிக்கு குரு செல்கிறார். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிக்கப்போகின்றார். அதற்காக பயப்படத் தேவை யில்லை. குருவின் பார்வை உங்களுக்கு நற்பலன்களை வழங்கும். உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய மூன்று இடங்களையும் குரு பார்ப்பதால், தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே நடத்தி முடிப்பீர்கள். சென்ற சில மாதங்களாகத் தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்துசேரும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க, முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விரய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, பிள்ளைகளுக்கு மங்கல நிகழ்வுகளை நடத்துவது போன்ற சுப காரியங் களைச் செய்யலாம். அதேநேரம் சேமிக்கும் அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும்.

மிதுன - சுக்ரன்

சித்திரை 20-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 5-ம் இடத்திற்குச் செல்லும் ேபாது, படித்து முடித்த பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் ஒருவருக்குமேல் சம்பாதிக்க வாய்ப்புக் கைகூடிவரும். அதி நவீனப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் கிடைக்கும். அர்த்தாஷ்டம குருவின் ஆதிக்கம் இருப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.

இம்மாதம் வராஹி வழிபாடு வளர்ச்சியைக் கூட்டும்.

பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 16, 17, 20, 21, மே: 2, 3, 6, 7, 8, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்: வைலட்.


Next Story