மகரம் - தமிழ் மாத ஜோதிடம்
மாசி மாத ராசி பலன்கள் 13-02-2023 முதல் 14-03-2023 வரை
முயன்றால் முடியாதது இல்லை என்று எடுத்துரைக்கும் மகர ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி புதனுடன் கூடி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். வெற்றிகள் ஸ்தானத்தில் குரு வீற்றிருக்கிறார். ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. எனவே வரவு வருவதற்கு முன்னரே செலவு காத்திருக்கும். அஷ்டமாதிபதி சூரியன் 2-ல் இருப்பதால் குடும்பப் பிரச்சினை அதிகரிக்கும். எனவே கவன மாக செயல்படுங் கள்.
உங்கள் ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் அடிக்கடி ஆரோக்கியத்தில் தொல்லை உண்டாகும். மருத் துவச் செலவு கூடும். ஜென்மச் சனியின் ஆதிக்கத்தால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. சகாய ஸ்தானத்தில் இருக்கும் குருவின் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிவதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடி விடும். சனியின் பலத்தால் காரியத்தடை ஏற்படாமல் இருக்க அதற்குரிய பிரத்யேக வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
உச்ச சுக்ரன் சஞ்சாரம்
மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 5, 10-க்கு அதிபதியான சுக்ரன், உச்சம் பெறுவது யோகம்தான். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். அவர்களின் கல்வி மேற்படிப்பு, உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் ஏதேனும் முயற்சி செய்திருந்தால் அதில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சினைகளில் சாதகமான சூழல் அமையும்.
கும்ப - புதன் சஞ்சாரம்
மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது நன்மையைத்தரும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் கேட்ட சலுகைகள் கிடைக்கும். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். முன்னோர்கள் கட்டி வைத்து சிதிலமடைந்த கோவில்களை சீரமைக்கும் வாய்ப்பு சிலருக்கு வாய்க்கும்.
மீன - புதன் சஞ்சாரம்
மாசி 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். 6-க்கு அதிபதி நீச்சம் பெறுவது நன்மைதான். 'படித்து முடித்தும் வேலையில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரலாம். மனக்குழப்பம் அகல நண்பர்கள் வழிகாட்டுவர்.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
மாசி 29-ந் தேதி, மீன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான சுக்ரன், 4-ம் இடத்திற்கு வரும்பொழுது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வங்கிகளின் ஒத்துழைப்பு, வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைத்து தொழிலை வளப்படுத்திக் கொள்வீர்கள். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்க எடுத்த முயற்சி கைகூடும். பணியாளர்களின் தொல்லை அகலும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். இடமாற்றம் மகிழ்ச்சி தரும்.
மிதுன - செவ்வாய் சஞ்சாரம்
மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அங்கிருந்து கொண்டு மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கப் போகிறார். இக்காலத்தில் மிகமிக கவனம் தேவை. பிரச்சினைக்கு மேல் பிரச்சினைகள் வந்து அலைமோதும். வீண் விரயம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டபடி செய்ய இயலாது. ஆரோக்கிய தொல்லையும், வைத்தியச் செலவும் ஏற்படும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு பணி நீக்கம் செய்யப்படும் அளவிற்குகூட பிரச்சினைகள் வரலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- பிப்ரவரி: 13, 14, 21, 22, 25, 26, மார்ச்: 8, 9, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிளிப்பச்சை.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் விரயங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்துவர். இடமாற்றம், உத்தியோக மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பணிபுரியும் இடத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.