மகரம் - தமிழ் மாத ஜோதிடம்
தை மாத ராசி பலன்கள் 15-01-2023 முதல் 12-02-2023 வரை
எந்த நேரத்தில் எதைச் செய்தால் வெற்றி பெறலாம் என்றறிந்த மகர ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு அஷ்டமாதிபதி சூரியனும், பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான சுக்ரனும் இணைந்திருக்கின்றனர். எனவே விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். கொடுக்கல் - வாங்கல்களில் திருப்தி ஏற்படாது. இழப்புகள் வராமல் இருக்க விழிப்புணர்ச்சி தேவை. குடும்பப் பிரச்சினை தலைதூக்கும். எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது.
மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு அஷ்டமாதிபதி சூரியனும், பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரனும் இணைந்து சஞ்சரிக்கின்றனர். எனவே தொழிலில் குறுக்கீடு அதிகரிக்கும். எதிரிகள் பயம் மேலோங்கும். அரசு வழி பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு குறையும். 4-ல் ராகுவும், 10-ல் கேதுவோடு சந்திரனும் இருக்கின்றனர். இதனால் ஆரோக்கியத் தொல்லை ஏற்படும். ஆகாரத்தில் கட்டுப்பாடு அவசியம்.
செவ்வாய் புத்திர ஸ்தானத்தில் இருப்பது யோகம்தான். 'படித்து முடித்த பிள்ளைகளுக்கு வேலை இல்லையே' என்ற கவலை அகலும். நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். ஜென்மச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் அடிக்கடி மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். எதையும் தன்னிச்சையாகச் செய்ய இயலாது. குரு 3-ல் சொந்த வீட்டில் பலம்பெற்றிருப்பதால் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். மறைந்த புதனால் நிறைந்த நன்மைகள் உண்டு.
சூரியன் - சனி சேர்க்கை
உங்கள் ராசிநாதனாகவும், தனாதிபதியாகவும் விளங்குபவர் சனி. அவரோடு அஷ்டமாதிபதி சூரியன் இணைவது அவ்வளவு நல்லதல்ல. திடீர் விரயங்கள் ஏற்படும். அரசு வழிப் பிரச்சினைகளால் மனசங்கடம் அதிகரிக்கும். கணக்கு வழக்குகளை கச்சிதமாக வைத்துக் கொள்ளுங்கள். பணிபுரியும் இடத்தில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். வீண் பழிகள் ஏற்படும். உங்களிடம் அளித்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைத்தால் அது நடைபெறாமல் போகலாம். 'பணி நிரந்தரம் ஆகவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். பணப்பொறுப்பில் இருப்பவர்கள் மிகுந்த விழிப்புணர்ச்சியோடு இருப்பதே உத்தமம்.
கும்ப - சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், தை 9-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கிறார். தொழில் ஸ்தானாதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகமான நேரம்தான். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். எதிர்பார்த்த லாபம் இல்லம் வந்துசேரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் நீண்ட காலமாக தடைபட்டு வந்த பதவி உயர்வு இப்ேபாது கிடைக்கும்.
மகர - புதன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தை 21-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்குள் பிரவேசிக்கும் புதனால், உத்தியோகத் தடை அகலும். உயரதிகாரிகள் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரத்தை வழங்குவர். கேட்ட சலுகைகள் கிடைக்கும். நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைத்தாலும், அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாமல் 'இருக்கும் இடத்திலேயே நீடிக்கலாம்' என்று நினைப்பீர்கள்.
இம்மாதம் சனிக்கிழமை தோறும் ஆதியந்தப் பிரபுவை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 17, 18, 19, 24, 25, 28, 29, பிப்ரவரி: 10, 11.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.