மேஷம் - வார பலன்கள்


மேஷம் - வார பலன்கள்
தினத்தந்தி 2 Dec 2022 1:10 AM IST (Updated: 2 Dec 2022 1:16 AM IST)
t-max-icont-min-icon

பிரதி பலன் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவும் மேஷ ராசி அன்பர்களே!

தடைபட்ட காரியங்களை முயற்சியுடன் செய்து முடிப்பீர்கள். புதிய நண்பர்களைச் சந்தித்து அவர்களின் மூலம் வளர்ச்சிக்கு அடித்தளமிடுவீர்கள். கடிதத் தொடர்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் சிலரது கோரிக்கைக்கு, உயரதிகாரிகளின் ஒப்புதல் கிடைக்கக்கூடும். சுயதொழிலில் ஆதாயம் சுமாராகவே இருக்கும். பழைய வாடிக்கையாளர்கள் மூலம் நல்ல திருப்பத்தைச் சந்திக்க நேரலாம். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளின் தலையீட்டால் நிர்வாகத்தில் அசவுகரியம் ஏற்படலாம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். சிறிய கடன் தொல்லைகள் தலைகாட்டும். இல்லத்தில் சுபகாரியம் நடத்த திட்டமிடுவீர்கள். கலைஞர்கள் பணியில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கக்கூடும். பங்குச்சந்தையில் லாபம் பெற நாட்டு நடப்புகளை ஊன்றிக் கவனிப்பது அவசியம்.

பரிகாரம்:- வியாழக்கிழமை குரு பகவானுக்கு மலர் மாலை அணிவித்து விளக்கேற்றி வழிபடுங்கள்.


Next Story