மேஷம் - வார பலன்கள்
எழுதுவதில் தனித் திறமை கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது வேலைகளில் ஏற்பட்ட தவறுக்காக, உயரதிகாரியின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு கூடும். பணியை விரைந்து முடிக்க ஓய்வின்றி பணியாற்றுவீர்கள். செய்யும் வேலைகளில் கவனக்குறைவால் சிறுசிறு தவறுகள் ஏற்படலாம். கூட்டுத்தொழில் செய்பவர்கள், வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசிப்பீர்கள். பங்குச்சந்தையில் எதிர்பார்க்கும் லாபம் இருக்காது. புதிய நண்பர்களின் ஆலோசனைகள் பலனளிக்கலாம். கலைஞர்கள், புதிய வாய்ப்பு பெற தீவிர முயற்சிகளில் ஈடுபடுவார்கள். பழைய வாய்ப்புகளில் இருந்தே தேவையான பணவரவுகள் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் சிறு சிறு கடன் தொல்லைகள் ஏற்படலாம். பெண்களே அவற்றை சமாளித்து விடுவார்கள்.
பரிகாரம்:- மகாலட்சுமி தேவிக்கு திங்கட்கிழமை நெய் தீபமிட்டு வழிபாடு செய்வது வெற்றியைத் தரும்.