மேஷம் - வார பலன்கள்


மேஷம் - வார பலன்கள்
தினத்தந்தி 14 Oct 2022 1:11 AM IST (Updated: 14 Oct 2022 1:37 AM IST)
t-max-icont-min-icon

இந்த வாரம் உங்கள் முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படக்கூடும். உறவினர் வருகையால் செலவுகள் உண்டு.உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த காரியங்கள் நடைபெற சிறிது காலம் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். கணக்குகளை சரியாக வைத்துக் கொள்வதுடன் சக ஊழியரிடம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தொழில் முன்னேற்றம் பற்றி ஆலோசனை செய்யவேண்டி இருக்கலாம்.குடும்பத்தில் அவசியமான செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்கும் சந்தர்ப்பம் சிலருக்கு ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பங்குச்சந்தையில் அதிக லாபம் பெற அன்றாட நிலவரங்களில் கவனமாக இருப்பது நல்லது. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நவக்கிரகச் சன்னிதியிலுள்ள சூரிய பகவானை வழிபாடு செய்வது பலன் தரும்.


Next Story