கும்பம் - வார பலன்கள்


கும்பம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 23 Jun 2023 2:29 AM IST (Updated: 23 Jun 2023 2:29 AM IST)
t-max-icont-min-icon

நுண்ணறிவுடன் செயல்பட்டு வெற்றி காணும் கும்ப ராசி அன்பர்களே!

ஞாயிறு பகல் 3.09 மணி முதல் செவ்வாய் வரை சந்திராஷ் டமம் உள்ளதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்க்கவும். வழக்கு விவகாரங்களில் அனுகூலமான திருப்பங்களைக் காணமுடியும். உத்தியோகஸ்தர்கள் பொறுப்புகளில் கவனமாக இல்லாவிட்டால் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை.

சொந்தமாகத் தொழில் செய்பவர்கள் வியாபாரத்தில் ஏற்றம் காண்பர். தள்ளிப் போட்ட காரியம் ஒன்றை உடனே செய்து முடிக்கும் சந்தர்ப்பம் உருவாகும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனையைக் கேட்டு செயல்பட வேண்டிய சூழ்நிலை வரும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உருவாகலாம். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். கலைத்துறையினர் வெளியூரில் நடைபெறும் பணிகளில் பணியாற்றும்போது கவனம் தேவை.

பரிகாரம்: இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை சூட்டியும், நெய் தீபமிட்டு வணங்கியும் வாருங்கள்.


Next Story