கும்பம் - வார பலன்கள்
எதையும் எளிதில் சாதிக்கும் கும்ப ராசி அன்பர்களே!
நீங்கள் எடுத்துக்கொண்ட செயல்கள் சிலவற்றில் தாமதம் இருந்தாலும், முடிவில் வெற்றியை அடைவீர்கள். தென் திசைச் செய்தி தென்றலாக தேடிவரும். பிரிந்தவர்கள் உங்களைத் தேடிவர வாய்ப்புண்டு. உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்காக சிறிது காலம் பொறுமை காக்க வேண்டியது அவசியம். வேலைகளில் கவனமாக இல்லாவிட்டால் உயர் அதிகாரிகளின் கோபப் பார்வைக்கு இலக்காக நேரிடும்.
சொந்தத் தொழில் நன்றாக நடைபெற, கடன் வாங்க வேண்டியது இருக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் சுமுகமாக நடந்து கொள்வது பிரச்சினைகளைத் தவிர்க்கும். குடும்பம் நன்றாக நடந்து வந்தாலும், சிறுசிறு பிரச்சினைகளும் இருக்கக்கூடும். பெண்களுக்கு மனவருத்தங்கள் விலகும். கலைஞர்கள் பணியாற்றும்போது கவனமாக இருப்பது அவசியம். பங்குச்சந்தையில் லாபம் சுமாராக இருக்கும்.
பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.