கும்பம் - வார பலன்கள்
எழுத்து திறமை நிறைந்து காணப்படும் கும்ப ராசி அன்பர்களே!
சிறப்பாக செயல்பட்டாலும் சிலவற்றில் மட்டுமே பூரண திருப்தியை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள், வேலைகளில் ஏற்பட்ட தவறுகளுக்காக, உயர் அதிகாரிகளின் கோபப் பார்வையைச் சந்திக்க நேரலாம். பொறுப்புகளில் கூடுதல் கவனம் இருப்பது அவசியம்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். வாடிக்கையாளரின் பணியை முடிக்க ஓய்வின்றி உழைப்பீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள், வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசிப்பீர்கள். தொழில் போட்டி காரணமாக, வியாபார வளர்ச்சியும், லாபமும் குறையலாம். குடும்பத்தில் ஏற்படும் கடன் பிரச்சினைகளை, தங்களின் சேமிப்பு கொண்டு பெண்களே சமாளித்து விடுவார்கள். கலைஞர்கள், புதிய வாய்ப்பு பெற தீவிர முயற்சிகளில் ஈடுபட நேரலாம். பங்குச்சந்தையில் லாபம் தாமதமாகும்.
பரிகாரம்:- திங்கட்கிழமை அம்பாள் ஆலயத்திற்குச் சென்று, மலர் மாலை சூட்டி வணங்கினால் துன்பங்கள் விலகும்.