கும்பம் - வார பலன்கள்
6.10.2023 முதல் 12.10.2023 வரை
உழைப்பால் உயர்வு பெறும் கும்ப ராசி அன்பர்களே!
இந்த வாரம் இஷ்ட தெய்வ வழிபாடு அவசியம். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கலாம். கனிவான பேச்சுகளால் காரியங்களை சாதிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக பொறுப்புகளில் அதிகக் கவனம் தேவைப்படும். சகப் பணியாளர்களிடம் சுமுகமாகப் பழகுவது நன்மை அளிக்கும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். முக்கியமான சமயத்தில் தொழிற்சாலையில் சிறிய தொல்லைகளை சந்திப்பீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள், சக கூட்டாளியின் சொந்த விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். பெண்களின் சேமிப்பு கரையலாம். கலைத் துறையைச் சேர்ந்தவர்கள், புதிய வாய்ப்புகளைப் பெற தீவிரமாக முயற்சிப்பார்கள்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுங்கள்.